மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1493 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1493 days ago
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு தளர்விற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்றது. அப்படப்பிடிப்பில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு நடித்தார்கள்.
ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் புதுச்சேரி வந்து தங்கியிருந்து நடித்துக் கொடுத்தார். இப்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்களாம்.
'நவரசா' படத்திற்காகப் பேட்டிகள் கொடுத்த போது 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்திற்கான 70 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக மணிரத்னம் கூறியிருந்தார். அடுத்து ஐதராபாத்தில் நடிக்க உள்ளது தான் கடைசி கட்டப் படப்பிடிப்பாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
படப்பிடிப்பு முடிவடைந்த பின் தான் படத்தின் முதல் பார்வை, கதாபாத்திர அறிமுகங்கள் வெளியாகும் என்கிறார்கள்.
1493 days ago
1493 days ago