உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாள் கொண்டாடிய மாளவிகா மோகனன்

பிறந்தநாள் கொண்டாடிய மாளவிகா மோகனன்

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சசிகுமார் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அந்தப் படத்தில் அவரை யாருமே கவனிக்கவில்லை. ஆனால், விஜய் ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்த பின் மாளவிகா தமிழ் சினிமா பிரபலங்களின் பட்டியலில் இணைந்தார். தற்போது தனுஷ் ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மூன்று தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 4ம் தேதியன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் அவருக்கு ரசிகர்களும் பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

மாளவிகா அவருடைய பிறந்தநாளை கேக் வெட்டி, பார்ட்டி வைத்து கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவருடன் குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

“பிறந்த நாளை எனது குடும்பத்தினருடனும், நெருங்கிய நண்பர்களுடனும் அன்பானவர்களுடனும் கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன். வீட்டில் மிக அழகான இரவாக அமைந்தது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !