உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடவுள் அவதாரம் அல்லு அர்ஜுனுக்கு செட் ஆகுமா?

கடவுள் அவதாரம் அல்லு அர்ஜுனுக்கு செட் ஆகுமா?

தமிழில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து என்பவர் இயக்கியிருந்தார். இந்தப்படத்திற்கு தமிழில் ஓரளவு வரவேற்பும் வசூலும் கிடைக்கவே, இந்தப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இளம் நடிகர் விஸ்வக் சென் மற்றும் மிதிலா பால்கர் ஜோடியாக நடிக்க உள்ளனர்.


இந்தப்படத்தின் தமிழ் பதிப்பில் சற்றே நீட்டிக்கப்பட்ட கவுரவ வேடத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். அது படத்திற்கு பிளஸ் பாயிண்ட் ஆகவும் அமைந்தது. இந்தநிலையில் தெலுங்கில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அல்லு அர்ஜுனை அணுகி பேசியிருக்கிறார்களாம். அல்லு அர்ஜுன் இன்னும் தனது சம்மதத்தை சொல்லவில்லை என்றாலும் அந்த கடவுள் கதாபாத்திரம் அவருக்கு பொருந்துமா என்பதும் சந்தேகத்திற்குறிய கேள்வி தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !