மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1485 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1485 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
1485 days ago
விஜய் டிவியில் 'நம்ம வீட்டு பொண்ணு' என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், 'பாரதி கண்ணம்மா' சீரியல் பிரபலங்கள் அந்த புதிய தொடருக்கு ஆதரவு கேட்டு வருகின்றனர். 'நம்ம வீட்டு பொண்ணு' என்கிற புதிய தொடர் ஆகஸ்ட் 16 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதில், சுர்ஜித் குமார், ஷப்னம், அஷ்வினி ஆனந்திதா, அருணா சுதாகர், வைஷாலி திலகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கான புரோமோக்களும் வெளியாகி மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே விஜய் டிவிக்கு டி ஆர் பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பெற்று தந்த மெகாஹிட் 'பாரதி கண்ணம்மா' பிரபலங்கள் இந்த புதிய தொடரை புரோமோட் செய்து வருகின்றனர். 'பாரதி கண்ணம்மா' தொடரின் பிரதான கதாபாத்திரங்களான பாரதியும் (அருண் பிரசாத்) கண்ணம்மாவும் (ரோஷினி ஹரிபிரியன்) 'நம்ம வீட்டு பொண்ணு' சீரியலுக்கும் ஆதரவு தருமாறு ரசிகர்களிடம் கேட்டு வருகின்றனர்.
1485 days ago
1485 days ago
1485 days ago