தமிழ், தெலுங்கில் தயாராகிறது செபாஸ்டியன் பி.சி.524
ADDED : 1514 days ago
ராஜா வாரு ராணி வாரு என்ற தெலுங்கு படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் கிரண் அப்பாவரம். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் நடித்த எஸ்.ஆர்.கல்யாண மண்டபம் சமீபத்தில் வெளியானது. தற்போது செபாஸ்டியன் பி.சி.524 என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
இதனை பாலாஜி சாயாபூ ரெட்டி இயக்குகிறார். நம்ரதா தாரேகர் மற்றும் கோமலி பிரசாத் நாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படம் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட நபரின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகிறது. படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிரணுக்கு இது முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.