ஷாரூக்கான் - அட்லீ பட பட்ஜெட் இத்தனை கோடியா?
ADDED : 1507 days ago
தமிழில் ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்க மும்பையில் முகாமிட்டுள்ளார். இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் அட்லீ, தற்போது ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியிருக்கிறார்.
அதோடு இப்படத்தில் நயன்தாராவை ஷாரூக்கானுக்கு ஜோடியாக்கியுள்ள அட்லீ, இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமாக இயக்குகிறாராம். குறிப்பாக, சண்டை காட்சிகளுக்கு சில ஹாலிவுட் கலைஞர்களை வரவழைக்கிறாராம். அதன்காரணமாக இப்படத்திற்கு ரூ. 200 கோடி பட்ஜெட் போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.