தமிழ், மலையாளத்தில் தயாராகும் கருவு
ADDED : 1525 days ago
ஆல்பா ஓசியன் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் கருவு. அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா ஆர்.மேனன் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். டோனி ஜார்ஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ரோஷன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றான மாந்திரீக மாயாஜால கலைகளின் இருள் அரசன் என அழைக்கப்படுபவன் தான் ஒடியன். தங்களுக்குப் பிடிக்காத எதிரிகளை பயமுறுத்துவதற்காக இரவு நேரத்தில் மிருகங்களைப் போல தனது தோற்றங்களை மாற்றிக்கொண்டு அச்சுறுத்தும் ஒடியனின் உண்மையான வாழ்க்கை சம்பவங்களை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. மர்மம் மற்றும் த்ரில்லர் காட்சிகளோடு தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிறது. என்றார்.