உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குறும்படத்தில் மைம்கோபி

குறும்படத்தில் மைம்கோபி

மைம் நடன கலைஞர் மற்றும் பயிற்சியாளர் கோபி. திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர் மெட்ராஸ் படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். அதன்பிறகு பிசியான நடிகர் ஆகிவிட்டார். மாரி, கபாலி, மாயா, 8 தோட்டாக்கள், விஸ்வாசம் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய தி பேமிலி மேன் 2 வெப் சீரிசிலும் நடித்திருந்தார். இதுவரை குணசித்தர வேடம், வில்லன் வேடங்களில் நடித்து வந்த மைம்கோபி தற்போது அரிச்சந்திரா என்ற குறும்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை லோலி என்ற புதுமுகம் இயக்குகிறார். இது சுடுகாட்டு வெட்டியானின் வாழ்க்கை தொடர்பான கதை என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !