குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய அருண்விஜய்
ADDED : 1513 days ago
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்படிப்பு ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் மாறி மாறி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பின்போது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காரைக்குடியில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார் அருண் விஜய்.
இந்த சமயத்தில் காரைக்குடியில் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார் இயக்குனர் ஹரி. இந்தநிலையில் ஓரளவு குணமடைந்துள்ள அருண் விஜய் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து ராமேஸ்வரம் கடலில் படகில் அருண் விஜய்க்கும் கேஜிஎப் புகழ் ராமச்சந்திர ராஜுவுக்கும் இடையே நடக்கும் நடைபெறும் சண்டைக்காட்சி ஒன்றை தற்போது படமாக்க ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் ஹரி.