ஹேஷ்டேக் டே - மாஸ்டர்-ஐ மிஞ்சிய வலிமை
ADDED : 1503 days ago
இன்று ஆகஸ்ட் 23ம் தேதி ஹேஷ் டேக் டே என்கிறது டுவிட்டர் சமூக வலைதளம். இதற்கு முன்பு இப்படி ஒரு தினம் இருக்கிறது என்று தெரியதவர்களுக்கும் சேர்த்து கூடுதல் தகவல் இதோ.
2007ம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் பிறந்தது தான் இந்த ஹேஷ்டேக் டே. 14 வருடங்களை நிறைவு செய்துள்ளது இந்த நாள். சில செயல்கள், ரசிகர்களின் செயல்பாடுகள், சில விசேஷங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்க உருவானதுதான் இந்த ஹேஷ்டேக்.
இந்த ஹேஷ்டேக் தினத்தில் இந்த வருடம் ஜனவரி முதல் ஜுன் வரையிலான அரையாண்டில் எந்த ஹேஷ்டேக் ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்பதை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.
அதன்படி வலிமை ஹேஷ்டேக் முதலிடத்திலும், மாஸ்டர் இரண்டாவது இடத்திலும், சர்காரு வாரிபாட்டா மூன்றாவது இடத்திலும், அஜித்குமார் நான்காவது இடத்திலும், தளபதி 65 ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
டுவிட்டர் தளத்தில் எப்போதுமே விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும்தான் டிரெண்டிங், ஹேஷ்டேக் சாதனை ஆகியவற்றில் போட்டி அதிகமாகவும், கடுமையாகவும் இருக்கும்.
டுவிட்டர் வெளியிட்டுள்ள பட்டியலைப் பார்க்கும் போது அஜித் தான் முன்னணியில் இருக்கிறார். இருந்தாலும் டாப் 5 இடங்களில் 4 இடங்களில் விஜய், அஜித் சம்பந்தபட்டவை இருக்கிறது. அது தமிழ் சினிமாவுக்கு சிறப்புதான்.
தெலுங்குத் திரையுலகம் சம்பந்தப்பட்ட சர்க்காரு வாரி பாட்டா மூன்றாவது இடத்திலும், வக்கீல் சாப் 10 வது இடத்திலும் உள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்களை விடவும் தமிழ் சினிமா ரசிகர்கள்தான் டுவிட்டர் தளத்தில் டாப்பில் உள்ளனர்.