சிரஞ்சீவி மகள் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக கவுரி கிஷன்
ADDED : 1554 days ago
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரி கிஷன். இந்த ஒரே படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார் கவுரி கிஷன். அதை தொடர்ந்து மலையாள திரையுலகிலும் ஒரு சில படங்களில் நடித்துவிட்ட கவுரி கிஷன் தெலுங்கிலும் ரீமேக்கான 96 படத்தில் தனது கேரக்டரில் மீண்டும் தானே நடித்தார்.
இந்தநிலையில் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா தயாரிக்கும் ஸ்ரீதேவி சோபன்பாபு என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் கவுரி கிஷன். சந்தோஷ் சோபன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சுஷ்மிதாவும் முதன்முறையாக ஒரு நடிகையாக அறிமுகமாகிறார். சிரஞ்சீவியின் பிறந்த நாளான நேற்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.