கந்த சஷ்டி கவச வரிகள் பட தலைப்பானது
ADDED : 1525 days ago
கந்த சஷ்டி கவசத்தில் இடம்பெற்ற நோக்க நோக்க என்ற வரி படத்தின் ஒரு படத்திற்கு டைட்டிலாக மாறியுள்ளது. பணமதிப்பிழக்க அறிவிப்பு வந்தபோது நடந்த முறைகேடுகளை தொலைக்காட்சி செய்தியாளரான நாயகி ஆதாரங்களுடன் சேகரித்து தொகுப்பாக்குகிறார். இதையறியும் சமூகவிரோதிகள் அவரையும் அவரது மகளையும் கொன்றுவிடுகிறார்கள். அந்த குழந்தை எப்படி கயவர்களை பழிவாங்குகிறது என்பதை ஹாரர் திரில்லராக உருவாக்கி இருக்கிறார்கள். நோக்க நோக்க படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கில் இயக்குனராக உள்ள ஆர்.முத்துக்குமார் ஆர்.புரடக்ஷன்ஸ், ஏவிபி சினிமாஸ் சார்பில் எழுதி இயக்கி உள்ளார். கதாநாயகனாக புதுமுகம் அர்ஜூன் சுந்தரம் அறிமுகமாக ஜோதிராய் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, ஜாக்குவர தங்கம், அலிஷா, பாவனா, சிந்தியா, பேபி அமுல்ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.