உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அந்த ஒரு வார்த்தைக்காக 5 வருடம் காத்திருக்கும் அனிதா சம்பத்

அந்த ஒரு வார்த்தைக்காக 5 வருடம் காத்திருக்கும் அனிதா சம்பத்

அனிதா சம்பத் தனது இரண்டாவது திருமண நாளில் தனது கணவர் குறித்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி ஒரு காதலா என இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்துள்ளார் அனிதா சம்பத். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதும் சரி, அதற்கு பின்னும் சரி நெட்டிசன்கள் அனிதாவை விடாமல் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், அதை எல்லாம் புறந்தள்ளி அனிதாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று வருகிறார் அவரது கணவர் பிரபா.

இந்நிலையில் சமீபத்தில் அவர்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ள அனிதா சம்பத் தனது கணவரை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் வளர்ச்சியோடு முழு காரணமாக இருந்து ஓரமா நின்னு கை தட்டி ரசிக்கிற உனக்கு திருப்பி கொடுக்க காதல் தவிர எதுவும் இல்லை. நம் காதல் போல் நாமும் வளர்வோம்!. இரண்டாம் வருட திருமண நாள் வாழ்த்துக்கள். காதலிக்க தொடங்கி 61வது மாசம் ஆச்சு. சீக்கிரமா ஐ லவ் யூ சொல்லி தொலை.. ஐந்து வருஷமா வெயிட் பண்றேன்”. என குறிப்பிட்டுள்ளார்.

இந்த இளம் ஜோடிகளுக்கு இடையே இப்படி ஒரு காதலா என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !