விநாயகர் சதுர்த்தியன்று டி.வியில் ஒளிபரப்பாகும் சார்பட்டா பரம்பரை?
ADDED : 1499 days ago
ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் கோக்கேன், கலையரசன் உள்பட பலர் நடித்த சர்பட்டா பரம்பரை படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த மாதம் 22ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் டி.வி பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. படம் வருகிற செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்பாகும் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கடந்த சுதந்திர தினத்தன்று சார்பட்டா பரம்பரையின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.