இசை ஆல்பம் மூலம் தமிழுக்கு வரும் அனுஸ்ரீ
ADDED : 1500 days ago
கேரளாவை சேர்ந்த நடன கலைஞர் அனுஸ்ரீ. தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தவர் பின்னர் தொடர் நடிகையும் ஆனார். டைமண்ட் நெக்லஸ் என்ற படத்தின் மூலம் சினிமா நடிகை ஆனவர் அதன்பிறகு ரெட் ஒயின், ஒப்பம், செகண்ட்ஸ், ஒரு சினிமாக்காரன், உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. அதற்கான முயற்சியிலும் இருக்கிறார். தற்போது நறுமுகையே என்ற இசை ஆல்பத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த நறுமுகையே என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து இசை ஆல்பமாக வெளியிட்டிருக்கிறர் இசை அமைப்பாளர் இஷான் தேவ். பிஜு த்வானிதரங் நடனம் அமைத்துள்ளார். ஐடி ரிக்கார்ட் வெளியிட்டுள்ளது.