சிரஞ்சீவியைத் தொடர்ந்து நாகார்ஜூனாவுக்கு ஜோடியாகும் காஜல்
ADDED : 1513 days ago
திருமணத்திற்கு முன்பே இந்தியன்-2, ஆச்சார்யா, ஹேய் சினாமிகா, பாரீஸ் பாரீஸ் போன்ற படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், திருணத்திற்கு பிறகு உமா என்ற பாலிவுட் படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தெலுங்கில் பிரவீன் சட்டாரு இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதமே இப்படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தவர்கள். தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
சிரஞ்சீவியுடன் நடித்து வந்த ஆச்சார்யா படப்பிடிப்பை முடித்து விட்ட காஜல் அகர்வால், அடுத்தபடியாக நாகார்ஜூனாவின் புதிய படத்தின் செட்டுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்.