நெகட்டிவ் ரோலில் நடிக்கும் காஜல் அகர்வால்!
ADDED : 1559 days ago
சிரஞ்சீவியுடன் நடிக்கும் ஆச்சார்யா படத்தை முடித்து விட்ட காஜல்அகர்வால், அதையடுத்து கதையின் நாயகியாக உமா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக பிரவீன சத்தாரு இயக்கும் தெலுங்கு படத்தில் நாகார்ஜூனாவுடன் நடிக்கிறார்.
இந்தபடத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல்அகர்வால் ஒரு ரா ஏஜென்டாக நடிக்கிறார். கதைப்படி நாகார்ஜூனாவுடன் இணைந்து செயல்படும் கேரக்டராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவருக்கே எதிராகி விடும் ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம் காஜல் அகர்வால். இப்படத்தின் ப்ரீலுக் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.