செப்.,9-ல் லாபம் படம் தெலுங்கிலும் அதே பெயரில் வெளியாகிறது
ADDED : 1513 days ago
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜயசேதுபதி-ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள படம் லாபம். இப்படம் செப்டம்பர் 9-ந்தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் லாபம் என்ற அதே தலைப்புடன் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது.
மேலும், தெலுங்கில் சைரா நரசிம்மரெட்டியைத் தொடர்ந்து வில்லனாக நடித்த நேரடி படம் உப்பெனா மற்றும் விஜய்யின் மாஸ்டர் தெலுங்கு டப்பிங் படங்கள் மூலம் அங்கு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார் விஜயசேதுபதி. அதேபோல் ஸ்ருதிஹாசன் நடித்து கடைசியாக வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய இரண்டு தெலுங்கு படங்களுமே ஹிட் என்பதால் இப்போது அவரும் தெலுங்கு சினிமாவில் பேசப்படும் நடிகையாகவே இருக்கிறார். அதனால் லாபம் படத்தின் தெலுங்கு பதிப்பை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடும் முயற்சிகள் நடக்கிறது.