தூரிகா என் தூரிகா... சேலையில் சொக்க வைக்கும் கண்ணம்மா
ADDED : 1514 days ago
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா போன்ற சமூகவலைதளங்கள் வந்த பிறகு வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை நடிகைகளுக்கும் தங்களை பிரபலமாக்கி கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணமா வேடத்தில் நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்ரியன்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டம் உருவாகி விட்டது. அதோடு சமூகவலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் விதவிதமாக தன்னை போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். கிட்டத்தட்ட 7.81 லட்சம் பேர் இவரை இதில் பின் தொடருகின்றனர். அதனால் இவரின் ஒவ்வொரு போஸ்ட்டிற்கும் ஏராளமான லைக்ஸ்களும் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் இப்போது பச்சை நிறத்திலான சேலை அணிந்த ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் பின்னணியில் நவரசா படத்தில் வரும் என் தூரிகா பாடல் ஒலிக்கிறது. அதற்கு ஏற்றபடி அந்த சேலையை காற்றில் பறக்க விட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். இதை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.