உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னம்மா பிரியங்கா... இப்படி பண்றீங்களேம்மா... சாப்பிடற இடமா அது....

என்னம்மா பிரியங்கா... இப்படி பண்றீங்களேம்மா... சாப்பிடற இடமா அது....

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸைக் காதல் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகவிட்டார். அது போல அமெரிக்க கலாச்சாரத்திற்கும் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது.

பிரியங்காவை விட நிக் ஜோனஸ் 11 வயது இளையவராக இருந்தாலும் இந்த ஜோடி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்தால் பல கலாச்சாரக் காவலர்கள் கொதித்தெழுந்து போவார்கள். நல்ல வேளையாக பிரியங்க, நிக் இவற்றையெல்லாம் அமெரிக்காவில்தான் செய்கிறார்கள்.


இன்று இன்ஸ்டாகிராமில் இரண்டு பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் பிரியங்கா. ஒரு புகைப்படத்தில் அவர் மட்டும் வானத்தைப் பார்த்து படுத்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் அவர் கவிழ்ந்து படுத்திருக்க, அவரது பின் புறத்தில் கத்தியால் ஏதோ ஒரு உணவுப் பண்டத்தை வெட்டுகிறார் கணவர் நிக். அந்தப் புகைப்படத்திற்கு சிம்பிளாக ஸ்நாக் எனப் பதிவிட்டிருக்கிறார் பிரியங்கா.

இந்தப் புகைப்படங்களை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்திருந்தாலும் பலரும் உணவைக் கட் செய்யும் இடமா அது என கேள்வியும், கேலியும் எழுப்பி வருகிறார்கள்.

பிரியங்காவின் உறவினரான நடிகை பரினீதி சோப்ரா, “மிமி திதி. இங்கே இன்ஸ்டாகிராமில் நமது குடும்பத்தில் என்ன நடக்கிறது ?. கண்களை மூடிக் கொண்டு லைக் பட்டனை அழுத்த முயற்சிக்கிறேன்,” என கமெண்ட் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !