ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பும் அஜித்
ADDED : 1495 days ago
அஜித் குமார் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் மேலும் சில போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றன. பின்னர் நாங்க வேற மாறி என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
வலிமை படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் இறுதி கட்ட காட்சிகளை படக்குவதற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். சில தினங்களுக்கு முன்பு அஜித் துபாய் விமான நிலையத்தில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டு படக்குழு சென்னை கிளம்பிவிட்டார்கள். தற்போது வலிமை படக்குழு மாஸ்கோவில் இருந்து சென்னை வந்து கொண்டிருக்கிறது. இன்று சென்னை வந்தடைவார்கள். எனவே படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.