சிக்சர் இயக்குனர் திருமணம்: சிவகார்த்திகேயன் வாழ்த்து
ADDED : 1546 days ago
வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாச்சி. இவர் காமெடி நடிகர் சதீஷின் மைத்துனர். சாச்சிக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர் சரண்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்கள் திருமணம் நேற்று (1.9.2021) காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் சிவகார்த்திகேயன், மிர்ச்சிசிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா , நடிகை ரித்திவிகா, வென்பா, கிருத்திகா, அமுதவணன் , விஜய் டிவி தீனா,பாலா, உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். அனைவரையும் சதீஷ் வரவேற்றார்.