உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதற்கும் அசராத சமந்தா : போட்டோஷூட்டில் பிஸி

எதற்கும் அசராத சமந்தா : போட்டோஷூட்டில் பிஸி

தென்னிந்திய திரையுலகில் சமீபத்திய பரபரப்புக்கு சொந்தக்காரர், சமந்தா என்றால் மிகையாகாது. டுவிட்டரில் இவர் தன் பெயரை, 'எஸ்' என ஒரே எழுத்தில், சுருக்கினார். இதனால், சமந்தா கணவருடன் இருக்கிறாரா இல்லையா, விவாகரத்து ஆகிவிட்டதா? என பல கேள்விகள் சமந்தாவை துரத்தின. ஆனால் எதற்கும் அவர் பதில் கூறவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் தன் தோழி உடன் இணைந்து சுற்றுலா சென்றார். அங்கு இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் போட்டோ எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இப்போது லேட்டஸ்ட்டாக அவர் எடுத்த போட்டோஷூட் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மாடர்ன் உடையில் சற்றே கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் சமந்தார். இந்த போட்டோக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் இன்ஸ்டாவில் குவிந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !