விஷால் தந்தைக்கு கிடைத்த கவுரவம்
ADDED : 1501 days ago
நடிகர் விஷாலின் தந்தை தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி(82). இப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். கொரோனா காலத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்ட சமயத்தில் வீட்டில் இருந்தபடியே உடலை பிட்டாக வைக்க நிறைய டிப்ஸ்களை கொடுத்தார். இந்நிலையில் மத்திய அரசின் பிட் இந்திய மிஷன் அமைப்பின் தூதராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுப்பற்றி விஷால் டுவிட்டரில், ‛‛தனது தந்தையை நினைத்து பெருமைப்படுவதாகவும், 82 வயதில் அவர் உடலை பிட்டாக வைத்திருப்பது எனக்கு ஊக்கம் அளிப்பதாகவும் மகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார் விஷால்.