அமிதாப் பச்சனின் கண்களில் கண்ணீரை வர வழைத்த தமிழ் பாடல்
ADDED : 1495 days ago
சுதா இயக்கத்தில் சூர்யா -அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவான படம் சூரரைப்போற்று. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இப்படத்தில் இடம்பெற்ற கயிலே ஆகாசம் என்ற பாடலை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, சூர்யாவின் இந்த பாடல் என் இதயத்தை உடைத்து விட்டது. தந்தைக்கும் மகனுக்குமிடையிலான இந்த பாடலை கேட்ககேட்க,எனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் யுகபாரதி எழுதிய இந்த பாடலை சைந்தவி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.