கடவுள் பக்தி கொண்ட கணவர் தேடும் ராஷி கண்ணா
ADDED : 1495 days ago
இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன் என பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 படங்களைத் தொடர்ந்து தற்போது சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், வருங்கால கணவர் பற்றி கூறுகையில், நான் கடவுள் பக்தி அதிகம் கொண்டவள். அதனால் என்னைப் போலவே ஒரு கடவுள் பக்தி கொண்டவரையே திருமணம் செய்து கொள்வேன். அதோடு அவர் பெரிய அழகனாக இல்லையென்றாலும், தர்ம சிந்தனை கொண்டவராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு மாப்பிள்ளையைத் தான் எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.