உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எந்த சீரியலும் விருதுக்கு தகுதியானதல்ல: கேரள மாநில டிவி விருது குழு அறிவிப்பு

எந்த சீரியலும் விருதுக்கு தகுதியானதல்ல: கேரள மாநில டிவி விருது குழு அறிவிப்பு

2020ம் ஆண்டுக்கான மலையாள சின்னத்திரை விருதுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. இதில் சிறந்த நடிகையாக செக்கபாஸ்ஹம் தொடரில் நடிக்கும் அஸ்வதி ஸ்ரீகாந்த் சிறந்த நடிகையாகவும், கதையறியாதே தொடரில் நடித்து வரும் சிவாஜி குருவாயூர் சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

சுமேஷ் இரண்டாவது சிறந்த நடிகராகவும், ஷாலு குரியன் இரண்டாவது சிறந்த நடிகையாகவும் தேர்வு பெற்றனர். சிறந்த நகைச்சுவை நடிகை விருதை நடிகை ரேஷ்மி பெற்றார். நகைச்சுவை நடிகராக சலீம் ஹாசன் தேர்வானார். சிறந்த காமெடி தொடராக மரிமயம் 5வது முறையாக தேர்வானது.

இந்த ஆண்டு எந்த சீரியலும் சிறந்த சீரியலாக தேர்வாகவிலை. இதுகுறித்து நடுவர் குழு கூறியிருப்பதாவது: எந்த டிவி சீரியல்களும் அங்கீகாரத்திற்கு தகுதியானவை அல்ல. சீரியல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை எதிர்மறையாக சித்தரிப்பது கவலை அளிப்பதாக உள்ளது. அதனால் இந்த ஆண்டு எந்த சீரியலுக்கும் விருது வழங்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். இனியாவது பொறுப்பான சீரியல்களை தர படைப்பாளிகள் முன்வர வேண்டும். என்று கூறியிருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !