எஸ்.ஏ.சந்திரசேகரின் ‛நான் கடவுள் இல்லை'
ADDED : 1536 days ago
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து, இயக்கி நடிக்கும் புதிய படம் நான் கடவுள் இல்லை. நான் சிகப்பு மனிதன் பாணியில், வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகிறது. இது இவரது 71வது படமாகும். சமுத்திரக்கனி, சரவணன், இனியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக சமுத்தரக்கனியும் அவரது மனைவியாக இனியாவும் நடிக்கின்றனர்.