நாட்டுப்புற பாடகருக்கு பவன் கல்யாண் 2 லட்சம் அன்பளிப்பு
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இந்தப்படத்தில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். சாஹர் சந்திரா இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்தப்படத்தின் டைட்டில் பாடல் வெளியிடப்பட்டது. அய்யப்பனும் கோஷியும் படத்தில் டைட்டில் பாடலை நஞ்சம்மா என்கிற நாட்டுப்புற பாடகியை பாட வைத்து அந்தப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. அதே பாணியில் பீம்லா நாயக் டைட்டில் பாடலையும் தெலங்கானாவை சேர்ந்த தர்ஷனம் மொகுலையா என்கிற நாட்டுப்புற பாடகரை அழைத்து பாட வைத்திருந்தார்கள்.
பாடலும் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முன் தினம் பாடகர் தர்ஷனம் மொகுலையாவை நேரில் அழைத்து அந்த பாடலை பாடியதற்காக பாராட்டியுள்ளார் பவன் கல்யாண். மேலும் தனது சார்பாக அவருக்கு 2 லட்சம் ரூபாய் அன்பளிப்பு தொகையாகவும் வழங்கியுள்ளார் பவன் கல்யாண்.