சொகுசு கார் வாங்கிய தாடி பாலாஜி
ADDED : 1537 days ago
பிரபல நடிகர் தாடி பாலாஜி பிஎம்டபிள்யூ கார் முன் நின்று போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. தற்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். தாடி பாலாஜி தற்போது புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த காருக்கு முன்னால் நின்றபடி அவர் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து விஜய் டிவி நண்பர்களும், சினிமா ரசிகர்களும் தாடி பாலாஜி சொகுசு கார் வாங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.