மகானில் துருவ் விக்ரமின் கேரக்டர் வெளியீடு
ADDED : 1494 days ago
விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் மகான் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கிறார்கள். லலித்குமார் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, படத்த்தின் டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்தப் படத்திலிருந்து விக்ரமின் லுக்கை மட்டுமே வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது துருவ் விக்ரமின் லுக்கை வெளியிட்டுள்ளார்கள்.
இதனை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ் மகான் மகன் தாதா என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மகான் விக்ரம் நல்லவர் என்றும் அவரது மகன் தாதா என்றும் குறிப்பிடுகிறார் கார்த்திக் சுப்பராஜ்.