மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1456 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1456 days ago
சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணியில் இருந்த ஒரு கதாநாயகி திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி, டீனேஜ் பெண்ணுக்கு தாயாகி, பின்னர் கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்ற நிலையில், மீண்டும் திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வர முடியுமா என்றால், முடியும் என சாதித்து காட்டி வருகிறார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். தற்போது மலையாள சினிமாவின் பிஸியான நடிகையாக பல படங்களில் நடித்துவரும் மஞ்சு வாரியர் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. இதில் மலையாளம் மற்றும் அரபி என இரு மொழிப்பாடமாக உருவாகும் ஆயிஷா என்கிற படத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியார். அறிமுக இயக்குனரான ஆமிர் பள்ளிக்கல் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். முதன்முறையாக மலையாளம் மற்றும் அரபியில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் இது என்றும் இதில் நடிக்கப்போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.
1456 days ago
1456 days ago