குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடத்திய மியா ஜார்ஜ்
ADDED : 1568 days ago
தமிழில் அமரகாவியம், ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். மேலும் தற்போது விக்ரமின் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கோட்டயத்தை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவருடன் மியா ஜார்ஜுக்கு திருமணம் நடைபெற்றது. கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டம் என்பதால் வெறும் ஐம்பது நபர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் மியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் ஓணம் பண்டிகை நிகழ்வின்போது தனது குழந்தையின் முகத்தை சோஷியல் மீடியாவில் வெளிக்காட்டினார் மியா. அதை தொடர்ந்து குழந்தைக்கு பெயர் சூட்டு நிகழ்வை நடத்தியுள்ள மியா ஜார்ஜ், மகனுக்கு லுக்கா என பெயர் சூட்டியுள்ளார்.