தலைவிக்காக 5-வது தேசிய விருது : கங்கனாவின் பெற்றோர் ஆருடம்
ADDED : 1488 days ago
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கையை பின்னணியாக கொண்டு, பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணவத் தமிழில் நடித்துள்ள தலைவி படம் சமீபத்தில் வெளியானது. இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் கங்கனாவின் நடிப்பு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கங்கனா ஏற்கனவே நான்கு முறை தேசிய விருது பெற்றவர். இந்தநிலையில் தலைவி படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த கங்கனாவின் பெற்றோர், நிச்சயமாக இந்தப்படத்திற்காக 5வது முறையாகவும் கங்கனா தேசிய விருது பெறுவார் என தங்களது எதிர்பார்ப்பை ஆருடமாக தெரிவித்து கங்கனாவை வாழ்த்தியுள்ளனர்.