ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
ADDED : 1486 days ago
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள விருமன் படத்தில் இவர் நாயகியாக களமிறங்குகிறார். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நடந்தது. அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார் அதிதி. சினிமாவில் தான் நாயகியாக அறிமுகமாவதால் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் அதிதி.