அடுத்த வாரத்தில் ஆர்ஆர்ஆர் படத்தின் 2வது பாடல் வெளியாகிறது
ADDED : 1582 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட், அஜய்தேவ்கன், சமுத்திரகனி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் நட்பை மையமாக வைத்து உருவான பிரமோஷன் பாடலை கடந்த மாதத்தில் வெளியிட்டனர். அப்பாடலின் தமிழ்ப்பதிப்பினை அனிருத் பாடியிருந்தார்.
இந்தநிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் அடுத்த அப்டேட் இரண்டாவது பாடலாக அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ராம்சரண்-அலியாபட் நடித்துள்ள அந்த பாடல் மாண்டேஜ் பாடலாம். இதுவும் முதல் பாடலைப்போலவே ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.