விக்ரம் படத்தில் இளமையான கெட்டப்பில் கமல்
ADDED : 1536 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை தயாரித்து நடிக்கிறார் கமல். இதில் போலீஸ் வேடத்தில் அவர் நடிக்க, விஜயசேதுபதி கேங்ஸ்டராக நடிக்கிறார். அந்தவகையில் கமலுக்கும் விஜயசேதுபதிக்குமிடையே நடக்கும் அடிதடி காட்சிகளை அதிரடியாக படமாக்கி வருகிறார் லோகேஷ்கனகராஜ். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது.
மேலும், இந்த படத்தில் தாடி வைத்த கெட்டப்பில் நடிக்கும் கமலுக்கு பிளாஷ்பேக் காட்சிகளும் உள்ள தாம். அதில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விக்ரம் படத்தில் நடித்தது போன்ற கெட்டப்பில் இளமையாக நடிக்கிறாராம் கமல். இந்த காட்சிகளில் கிராபிக்ஸ் மூலம் 35 ஆண்டுகளுக்கு முந்தைய கமலை மீண்டும் ரசிகர்கள் முன்பு தத்ரூபமாக கொண்டு வந்து நிறுத்துகிறாராம் லோகேஷ் கனகராஜ்.