பிக்பாஸ் பாணியில் ஜி தமிழில் வெளியான கமல் புரோமோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே பிக்பாஸ் சீசன் 5-க்கான அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் பிக்பாஸின் இரண்டாவது புரோமோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டப் கொடுக்கும் வகையில் ஜி தமிழும் சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்புகிறது. இந்நிலையில் பிக்பாஸ் பாணியில், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் தீம் மியூசிக்குடன் ஆரம்பிக்கலாமா? என கமல் கேட்கும் புதிய புரோமோவை ஜி தமிழ் வெளியிட்டுள்ளது. அதில், நிகழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடாமல் விரைவில் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பார்க்கும் ரசிகர்கள் பிக்பாஸ் ஜி தமிழுக்கு மாறுகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.