உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிவேதா தாமசுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு

நிவேதா தாமசுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு

நடிகை நிவேதா தாமஸ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்தில் நடித்தார். தமிழில் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார்.

நிவேதா தாமஸ் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மாட்டுப் பண்ணையில் ஒரு பசுவின் மடியில் பால் கறந்து அதில் காபி செய்து குடித்துள்ளார். மகிழ்ச்சி என்ற தலைப்புடன் அவர் அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த விடியோவை அடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் அவரைத் தாக்கிப் பேசி வருகின்றனர்.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு மற்றொரு பெண்ணை சுரண்டுவது கொடூரமானது, அது மற்றொரு இனத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும். மற்றொரு உயிரினத்தின் உடலில் இருந்து லாபம் ஈட்டுவதற்கு நமக்கு உரிமை இல்லை, குறிப்பாக பாலுறவு சுரண்டலுக்குப் பிறகு, மனிதர்களுக்கு பால் வழங்குவதற்காக மட்டுமே அது செறிவூட்டப்படுகிறது. என்று தெரிவித்துள்ளனர். இதே போல் பல விலங்கு நல ஆர்வலர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த விமர்சனத்திற்கு நிவேதா இன்னும் பதிலளிக்கவில்லை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !