உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்வைவர் யுத்தம்... வெல்லப்போது யார்? - களத்தில் 16 போட்டியாளர்கள்...!

சர்வைவர் யுத்தம்... வெல்லப்போது யார்? - களத்தில் 16 போட்டியாளர்கள்...!

உலகளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான ‛சர்வைவர் நிகழ்ச்சி முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. செப்., 12 முதல் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் அர்ஜூன் முதன் முறையாக இந்நிகழ்ச்சி மூலம் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபர் தீவில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். விக்ராந்த், உமாபதி ராமைய்யா, நந்தா, பெசன்ட் ரவி, நடிகைகள் விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 10 போட்டியாளர்களில் 8 போட்டியாளர்கள் விபரம் கடந்த ஞாயிறு அன்று போட்டியின் துவக்க நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டனர்.


அதன்படி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், பிகில் படத்தில் நடித்தவருமான இந்திரஜா, ‛வடசென்னை, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரண் சக்தி, நடிகை லக்ஷமி ப்ரியா, நடிகர் ராம் சி, நடிகர் லக்கி நாராயணன், விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணன், சிங்கப்பூரை சேர்ந்த பாடகி லேடி காஷ், நடிகர் அம்ஜத் கான் என மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இன்னும் இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் களமிறங்க உள்ளனர்.


நிகழ்ச்சியின் முதல்நாள் போட்டியாளர்கள் அறிமுகம் என போனது. அன்றே காடர்கள், வேடர்கள் என போட்டியாளர்கள் இரு அணியினராக பிரிக்கப்பட்டனர். இரண்டாவது நாள் முதலே போட்டிக்கான கடுமையான சவால்கள் துவங்கிவிட்டன. குறிப்பாக அவர்களுக்கான அடிப்படை தேவைக்கான சவால்கள் நடந்தன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சவால்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கூடவே சண்டை, சச்சரவுகள் துவங்கி உள்ளன. போக போக போட்டிகள் கடுமையாக நடக்கும் என தெரிகிறது.

இதுதவிர வாரம் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவர். அது யார் என்பதை போட்டியாளர்களே ஓட்டு போட்டு தீர்மானிப்பர். மொத்தம் 90 நாட்கள் நடக்கின்றன. அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு யார் இறுதிவரை போட்டியில் தாக்கு பிடிக்கிறார்களோ அவர்களே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆவார். அவருக்கு ரூ.1 கோடி பரிசு காத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !