இயக்குனர் ஆனார் போஸ்டர் நந்தகுமார் மகன்
சென்னையில் திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டும் வேலையை பெரிய அளவில் செய்து வந்தவர் நந்தகுமார். இதனால் இவரை போஸ்டர் நந்தகுமார் என்றே அழைப்பார்கள். இவர் சினிமாவில் உள்ள அனைவருக்கும் மிகவும் அறிமுகமானவர். மெட்ராஸ் படத்தில் இவரை பா.ரஞ்சித் நடிகராக அறிமுகப்படுத்தினார். அன்று முதல் படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவரது மகன் தினகரன், பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். கபாலி, காலா படங்களில் முக்கிய பங்காற்றினார். தற்போது தினகரன் இயக்குனராகி இருக்கிறார். சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்னையை மையமாகக் கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
பலூன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பலூன் பிக்சர்ஸ் டி.என்அருண்பாலாஜி மற்றும் பா.ரஞ்சித் இணைந்து தயாரிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் படத்தில் முன்ணணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள்.