மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1448 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1448 days ago
தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி படங்களை இயக்கிய அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு லயன் என்ற தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் லயன் படத்தின் கதை உலக புகழ்பெற்ற வெப் சீரிசான மணி ஹீஸ்டின் தழுவல் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கானை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கருதிய அட்லி, தொடர்ந்து அவரை துரத்தி துரத்தி சந்தித்து வந்தார். அட்லி சொன்ன எதை எதுவும் பிடிக்காத ஷாருக்கான் மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் மாதிரி ஒரு கதை பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து மணி ஹீஸ்ட் சாயலில் அட்லி உருவாக்கிய கதைதான் லயன் என்கிறார்கள். ஒரு பெரிய வங்கி கொள்ளை, அந்த கொள்ளையை வெளியில் இருந்து இயக்கும் அதன் கேப்டன். இந்த ஒன் லைனை வைத்து அட்லி கதையை எழுதியிருக்கிறார். இந்த கதைதான் இப்போது படமாகி வருவதாக கூறப்படுகிறது.
இதில் ஷாருக்கான கொள்ளை அணியின் கேப்டனாக அதாவது மணி ஹீஸ்ட்டில் வரும் புரபசர் மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார், நயன்தாரா போலீஸ் அதிகாரி. இந்த கதை தற்போது கசிந்து பாலிவுட்டில் பரபரப்பாகி இருக்கிறது. பின்னால் பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் ஷாருக்கான் மணி ஹீஸ்ட்டின் உரிமத்தை முறைப்படி பெற்று வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லி இயக்கிய படங்கள் அனைத்தும் பிரபல ஒரு படத்தின் தழுவலாகவே இருப்பது வழக்கமான ஒன்றுதான்.
1448 days ago
1448 days ago