பரபரப்பை ஏற்படுத்தாமல் கடந்து போன 'தலைவி'
ADDED : 1491 days ago
மறைந்த முன்னாள் முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்ற பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்ட படம் 'தலைவி'. படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் வழக்கம் போல சில போஸ்டர்களை வெளியிட்டு ஆரம்ப கட்ட பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், படம் வெளியாவதற்கு முன்பு எந்த விதமான பரபரப்பையும் ஏற்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
ஆனால், அவரது பயோபிக் படம் வந்து எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழிலாவது ஓரளவுற்கு வசூலாகியிருக்கிறது படம். தெலுங்கு, ஹிந்தியில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியில் இந்த வார இறுதியிலும், தமிழ், தெலுங்கில் இன்னும் இரண்டு வாரத்திற்குப் பிறகு இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அப்போதாவது படம் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.