உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யோகிபாபுவிற்கு ஜோடியாகும் ஓவியா

யோகிபாபுவிற்கு ஜோடியாகும் ஓவியா

களவாணி படத்தில் அறிமுகமான ஓவியாவிற்குஅதன்பிறகு ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு களவாணி-2, காஞ்சனா-3, 90 எம்எல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதையடுத்தும் படங்கள் இல்லை. இந்த நிலையில் தற்போது யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் ஓவியா. அன்கா மீடியா தயாரிக்கும் இப்படத்தின் பூஜை வருகிற 24ந்தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் ஸ்டுடியோவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை படத்தின் தலைப்பு வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !