உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னைவிட நீங்க தான் சூப்பர் ; ராணாவை புகழ்ந்த பிரித்விராஜ்

என்னைவிட நீங்க தான் சூப்பர் ; ராணாவை புகழ்ந்த பிரித்விராஜ்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக்காகி வருகிறது. பிஜுமேனன் கேரக்டரில் பவன் கல்யாணும் பிரித்விராஜ் கேரக்டரில் ராணாவும் நடிக்கின்றனர். இந்தநிலையில் பிரித்விராஜின் கோஷி குரியன் கதாபாத்திரத்தை தெலுங்கில் டேனியல் சேகர் என்கிற பெயராக மாற்றி நேற்று ராணாவின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

ஒரிஜினலில் நடித்த நடிகர் பிரித்விராஜே இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். மேலும் “எனக்கு அதிக சந்தோஷத்தை தருவது என்னவென்றால் எனது நண்பரும் சகோதரரை போன்றவருமான ராணா இந்த கேரக்டரில் நடிப்பதுதான். உண்மையிலேயே என்னைவிட நீங்கள் தான் சூப்பராக இருக்கிறீர்கள். அதிலும் வேட்டியில் தெறிக்க விடுகிறீர்கள்” என புகழாரமும் சூட்டியுள்ளார் பிரித்விராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !