அந்த மாதிரி காட்சி இல்லை
ADDED : 1488 days ago
அருண் கிருஷ்ணா மற்றும் தக்ஷனா ஜோடியாக நடிக்க, 18 வயது இளைஞர் ஈஸ்வர் இயக்கிய, ‛காற்றினிலே' 50 நிமிட படத்தை, இயக்குனர் பாக்யராஜ் பாராட்டியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ‛‛இந்த இளம் குழு படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளனர். இயக்குனர் ஈஸ்வர் கோபால கிருஷ்ணனின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும்,'' என்றார்.
இயக்குனர் ஈஸ்வர் கூறுகையில், ‛‛ஒரே இரவில் இருவருக்கு இடையே நடக்கும் காதல் கதைஇது. கற்றது தமிழ் படத்தில் வரும் பாடல் ஒன்றில், ‛கதை பேசிக்கொண்டு வா காற்றோடு போவாம்...' என்ற வரியே எனக்கு இப்படத்தை உருவாக்க உத்வேகம் தந்தது. இதில் நெருக்கமான, மது உள்ளிட்ட போதைப்பொருள் காட்சிகள் எதுவும் இல்லை,'' என்றார்.