பகத் பாசில் படத்திற்கு சுவிஸ் திரைப்பட விழாவில் விருது
பகத் பாசி்ல் நடித்த மலையாள திரைப்படம் ஜோஜி. இந்த ஆண்டின் துவகத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இது மேக்பத் என்ற ஜேக்ஸ்பியரின் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. அரச பரம்பரைக்குள் சொத்துக்கும், அதிகாரத்துக்கும் நடக்கும் அந்தரங்க அரசியல் பற்றி பேசிய நாடகத்தை இன்றை சமூகத்துடன் இணைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டது.
திலீப் போத்தன் இயக்கி இருந்தார். ஷியாம் புஷ்கரன் திரைக்கதை எழுதியிருந்தார். பகத் பாசிலும் ஒரு தயாரிப்பாளராக இருந்தார். பாபுராஜ், ஷம்மி திலகன், பாசி்ல் ஜோசப் உள்பட பலர் நடித்திருந்தனர், சாஜு காலித் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஜஸ்டின் வர்க்கீஸ் இசை அமைத்திருந்தார். குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.
தற்போது இந்த படம் சுவிட்சர்லாந்தில் நடந்து வரும் சுவிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது பெற்றுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ள பகத் பாசில். சுவிசில் இருந்து ஒரு நல்ல செய்தி ஜோஜி விருது வென்றிருக்கிறான். என்று தெரிவித்திருக்கிறார்.