மீண்டும் வருகிறார் சாந்திப்ரியா
ADDED : 1477 days ago
எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஷாந்தி எனும் சாந்திப்பிரியா. அதன் பிறகு நேரம் நல்லா இருக்கு, சர்க்கரை பந்தல், ரெயிலுக்கு நேரமாச்சு, சிகப்பு தாலி, பூவிழி ராஜா, எல்லாமே என் தங்கச்சி, உள்பட பல படங்களில் நடித்தார். ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் இந்தி டிவி தொடர்களி்ல் நடித்து வந்தார். இவர் நடிகை பானுபிரியாவின் சகோதரி ஆவார்.
கடந்த 10 ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்த தொடர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.