உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தமிழில் அமலா ரீ-என்ட்ரி

மீண்டும் தமிழில் அமலா ரீ-என்ட்ரி

டி.ராஜேந்தர் இயக்கி, நடித்த மைதிலி என்னை காதலி என்ற படத்தில் அறிமுகமானவர் அமலா. அதன்பிறகு ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அவர் 1980களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்ட அமலா 1991ல் கற்பூர முல்லை படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் கணம் என்ற படத்தில் 20 வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் அமலா. சர்வானந்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ரீது வர்மா நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் என்பவர் இயக்குகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !