அக். 4ல் அண்ணாத்த முதல் பாடல் வெளியீடு
ADDED : 1577 days ago
சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛அண்ணாத்த'. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாடல் வரும் அக். 4ல் வெளியாகிறது. இமான் இசையமைத்த இப்பாடலை, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.